செவ்வாய், 8 ஜனவரி, 2013

பல்லவமன்னர்கள் கள்ளர்களே-ஆதாரங்கள்


பல்லவமன்னர்கள் கள்ளர்களே ! – ஆதாரங்கள் வருமாறு
சேர, சோழ, பாண்டிய மன்னர்களும், தொண்டைமான், புல்லி, முத்தரையர் போன்ற மன்னர்களும் பழந்தமிழ் இலக்கியங்களிலும் கல்வெட்டுக்களிலும் கள்வர், கள்ளர் எனக்குறிப்பிடப்பட்டுள்ளார்கள்.
இவனென் னலங்கவர்ந்த கள்வ னிவனெனது
நெஞ்ச நிறையழித்த கள்வனென். . “
என முத்தொள்ளாயிரம் சேரமானைப் பற்றியும்
“.மடல்சூழ்ந்த தார்நம்பி யிடங்கழிக்கும்”(சுந்தரர் திருத்தொண்டர்தொகை)
“கோனாட்டுக் கொடும்பாளூர் வேளிர் குலத்து அரசன்
ஆதித்தன் புகழ் மரபிற்குடி முதலோன்”(சேக்கிழார்-பெரியபுராணம் பக்.491)
“ கொங்கிற் கனகமணிந்த ஆதித்தன் குல முதலோன். .
இருக்குவேள் மன்ன இடங்கழியே”(நம்பியாண்டார் நம்பி-திருவந்தாதி
இருக்குவேளிர் குலத்தலைவர் . இடங்கழியார். . பொன்வேய்ந்த ஆதித்தன்
மரபோர்” (சேக்கிழார் திருத்தொண்டர் புராண சாரம் பக்.52)
என சுந்தரர்,சேக்கிழார்,நம்பியாண்டார் நம்பிஅடிகள் சோழர்கள் கள்ளர்கள் எனவும்
“ களப ராஜராஜன்”
“ கள்வன் ராஜராஜன்”
என மெய்க்கீர்த்தி கல்வெட்டு இராண்டாம் இராசராச சோழனை களபர்-கள்வன் எனவும்
“ கழல்புனை திருந்தடிக் கள்வர் கோமான்
மழபுலம் வணக்கிய மாவண் புல்லி
விழவுடை விழுச்சீர் வேங்கடம்” (அகம்.61)
“ புடையலங் கழற்காற் புல்லி குன்றத்து” (அகம்.)
“ பொய்யா நல்லிசை மாவண் புல்லி” (அகம்.359)
“ நெடுமொழிப் புல்லி” (அகம்.)
புல்லி நன்னாட்டும்பர்”(அகம்.)
“ கடுமான் புல்லிய காடிறந்தோரே”(நற்றிணை)
என மாமூலனார் வேங்கடமலைப்பகுதியை ஆண்ட புல்லியைப்பற்றியும்
“ புல்லி வியன்றலை நன்னாட்டு வேங்கடம்”
“ மாஅல்யானை மறப்போர்ப் புல்லி
காம்புடை நெடுவரை வேங்கடம்”
என கல்லாடனார் வேங்கடமலைப்பகுதியை ஆண்ட புல்லியைப் பற்றியும்
“ வினைநவில் யானை விறற்போர்க் தொண்டையர்
இனமழை தவழு மேற்றரு நெடுங்கோட்
டோங்கு வெள்ளருவி வேங்கடத் தும்பர்” (அகம்.)
என வேங்கடமலைப்பகுதியை ஆண்ட தொண்டைமானைப் பற்றியும்
“ கள்வர் பெருமகன் - தென்னன்”
“ கள்வர் கோமான் தென்னவன்”
என அகநானூறு பாண்டிய மன்னனையும்
“ காவிரி கனையுந் தாழ்நீர்ப் படப்பை
நெல்விளை கழனி யம்பர் கிழவோன்
நல்லருவந்தை வாழியர் புல்லிய
வேங்கட விறல்வரைப்பட்ட
ஓங்கல் வானத் துறையினும் பலவே” (புறம்.385)
என அம்பர் நகர் கிழான் வள்ளல் அருவந்தையைப்பற்றியும் குறிப்பிடுகின்றன..
“எந்தை வாழி யாதனுங்க
என்னெஞ்சந் திறப்போர் நிற்காண்குவரே
நின்னியான் மறப்பின் மறக்குங் காலை
என்னுயிர் யாக்கையிற் பிரியும் பொழுதும்
என்னியான் மறப்பின் மறக்குவென்”
என வேங்கடமலையிலிருந்த ஆதனுங்கன் என்ற வள்ளலைப்பற்றியும்
“பெருமுத்தரையர் பெரிதுவந்தீயும்
கருணைச் சோறார்வர்” (நாலடியார் 200)
“ நல்கூர்ந்தக் கண்ணும் பெருமுத்தரையரே
செல்வரைச் சென்றிரவாதார்” (நாலடியார் 296)
என முத்தரையர்களைப்பற்றியும் குறிப்பிடுகின்றன. இன்னோர் கள்ளர் என மு.இராகவையங்கார் குறிப்பிடுகிறார். திருக்காட்டுப்பள்ளி-செந்தலைதூண் கல்வெட்டு
“வல்லக்கோன், தஞ்சைக்கோன் ஸ்ரீ கள்வர் கள்வன் பெரும்பிடுகு முத்தரையன்.”
எனவும் குறிப்பிடுகின்றன. கள்ளர் என்னும் சொல் மிக உயர்ந்த சொல்லாகக் கருதி நாயன்மார்களும் ஆழ்வார்களும் பாடியுள்ளதை காண்க:
உள்ளங் கவர் கள்வன்
என சிவபெருமானை சம்பந்தரும்
“கள்ள மாதவா கேசவா”
“காரகத்தாய் கார்வானத்துள்ளாய் கள்வா”
“விரிபொழி லரங்கந்தன்னுள் கள்வனார் கிடந்த வாறும்”
என திருமாலை திருமொழிப்பிரபதங்களில் ஆழ்வார்களும் குறிப்பிடுகின்றனர். தற்போதும் சேர,சோழ,பாண்டிய மன்னர்கள் ஆகிய மூவேந்தர்களும் – மழவர் என்னும் வீரக்குடியினரின் குருதி கலப்புடையோர் என்பதை பெருமளவினர் அறியாமல் உள்ளனர். அதைப்பற்றிய ஒரு தனிக்கட்டுரையில் நிறுவிக்காட்டுவேன். தற்போது விரிவஞ்சி இச்செய்தியுடன் இதனை விடுக்கின்றேன்.
திருப்பதி வெங்கடாசலபதி முதலில் சிவனாக இருந்தது என்பதற்கு ஆதாரங்கள் உள்ளன. சித்தூர் ஜில்லா சந்திரகிரி தாலூகாவில் திருச்சானூர் என வழங்கும்திருசோகினூர் பத்மாவதி அம்மன்கோயில் வாசலில் தரையில் வைத்துக் கட்டப்பட்டுள்ள ஒரு துண்டுப் பகுதியில் விஜயதந்தி விக்கிரவர்மன் கல்வெட்டு உள்ளது.இம்மன்னன் காலம் கி.பி.777-830. இவன் நந்திவர்மப் பல்லவ மல்லன் மகன்.(இவன் தந்தைக்கு மல்லன் என்னும் விருது பெயர் உள்ளதைக் கவனிக்க. இம்மன்னனுக்கு மாற்பிடுகு என்னும் பட்டம் உண்டு. இவன் திருச்சிராப்பள்ளி தாலுகாவில் இக்காலம் ஆலம்பாக்கம் என வழங்கும் தந்திவர்மமங்கலத்தி லுள்ள கைலாசநாதர் கோயிலை கட்டியுள்ளார். இங்கே ஒரு ஏரி ஒன்றை வெட்டி இதற்கு தன் நினைவாக மாற்பிடுகு ஏரி என்று பெயர் வைத்துள்ளான்.. பத்மாவதிஅம்மன்கோயில் வாசலில் உள்ள இம்மன்னனின் கல்வெட்டுக்கள் தமிழிலும் கிரந்தத்திலும் கலந்து உள்ளன. அக்கல்வெட்டின் காலம் கி.பி.828 இக்கட்டுரைக்கு தேவையானமுக்கியகல்வெட்டுப் பகுதி வருமாறு:

“. .ஸ்வஸ்தி ஸ்ரீ கோவிசைய தந்தி விக்கிரமவர்மற்கு யாண்டு அம்பத்தொன்றாவது திருவெ(ங்)கடக் கொட்டத்துக் குடவூர் நாட்டுத் தி(ரு)ச் சொகினூர்த் திருவெங்கடத்து (எ)ம் பெருமானடிகளுக்கு எழுந்தருளிவித்த
திருவிளங் கொயிற் பெருமானடிகளுக்குச் சோழநாட்டுச் சொழனார். . .

(பல்லவரின் ஆதிக்கத்தின் கீழ் ஆட்சிசெய்த சோழசிற்றரசர் இந்த இளங்கோயிலுக்கு திரு விளக்கெரிக்க விட்ட நிவந்தம் பற்றிய கல்வெட்டு இதுவாகும்)
அக்கல்வெட்டில் திருவேங்கடத்துப்பெருமானடிகளுக்கு திருஇளங்கோயில் இருந்ததெனக் குறிப்பிட்டுள்ளது. இளங்கோயில் என்பது பற்றிய விபரம் வருமாறு:-

இடிந்துபோன ஒரு கோயிலின் கர்ப்பக் கிருகத்தை(சிவபெருமான் எழுந்தருளியிருக்கும் இடத்தை) பிரித்துப் புதுப்பிக்கவோ பழுதடைந்த அப்பகுதியில் கட்டுமானவேலைசெய்து திருப்பணி செய்யவோ வேண்டியவர், இந்து ஐதீகவிதிப்படி கர்ப்பக்கிருகத்திலிருந்த படிமத்தை (மூலவர் சிவபெருமானின் திருஉருவத்தை) இருப்புக் கவசத்தால் மூடி, வேறோர் அணிய இடத்தில் சிவலிங்கத்தை நிறுவி ஆவாகனம் செய்து அதற்குப் பூசை முதலியவை செய்வர். திருப்பணி நிறைவுற்று கும்பாபிடேகம் நிகழும் காலத்து மூடிய பழைய மூலவர் சிவலிங்கத்தில் சக்தியை ஏற்றி மறுபடியும் முன்போல் பழைய இடத்தில் நிறுவி பூசை நடத்துவர். அல்லது புதிதாக செய்த தற்காலிக மூலவர் திருஉருவத்தை(சிவலிங்கத்தை) எடுத்து மணலுக்குள்ளோ, கடலிலோ விட்டு மறைத்து விடுவர். இல்லாவிட்டால், அத்தற்காலிக மூலவருக்கும் கோயில் கட்டி பூசை முதலியன செய்து வணங்குவர். அத்தற்காலிக மூலவருக்குக்கட்டப்பட்ட புதிய கோயிலுக்கு பால ஆலயம் அல்லது இளங்கோயில் என பெயரிட்டு குறிப்பிடுவர். திருமீயச்சூர் இளங்கோயில், கடம்பூர் இளங்கோயில் இதற்கு சான்றுகளாகும். இளங்கோயில் பற்றி. . . . .

“வெற்பென் றிருஞ்சோலை வேங்கடமென் றிவ்விரண்டும்
நிற்பென்று நீமதிக்கும் நீர்மைபோல்—நிற்பென்
றுளங்கோயி லுள்ளம்வைத் துள்ளினேன் வெள்ளத்
திளங்கோயில் கைவிடே லென்று”

என்ற பாசுரத்தின் (இயற்பா—இரண்டாந்திருவந்தாதி, செய்யுள் 2235) உரையில், இளங்கோயில்
அல்லது பால ஆலயம் என்று குறிப்பிட்டுள்ளபடி இக்காலத்தும் திருக்கோயில்களில் எம் பெருமான் திருமேனியை ஜீர்ணோத்தாரணம் செய்யநேரும்போது பாலஆலய(இளங்கோயில்)
பிரதிஸ்டை செய்வது வழக்கமாயிருப்பது காண்க. “வேறொரு பெருங்கோயிலிற் சென்று சேர்வதற்கு உறுப்பாக(பூர்வாங்கமாக) கொள்ளும் கோயிலை பாலாலயம் என்பது” எனக் காஞ்சி பிரதிவாதி அண்ணங்கராசாரிய சுவாமிகள் எழுதியுள்ளதை நோக்குக.

திருச்சோகினூர்த் திருவேங்கடத்து பெருமானடிகளுக்கு எழுந்தருளிவித்த திருவிளங் கோயில் சிவன் கோயிலா? அல்லது திருமால் கோயிலா?:- சிவன் கோயில் என்பது டி.ஏ.கோபிநாதராயர், எம்.ஏ. அவர்கள் கருத்தாகும். அவர் கூறும் காரணம்: முதலாம் இராச ராசன் காலத்து தஞ்சைக் கல்வெட்டுக்கள் ஒன்றில்(SII.Vol.II No.66)கடம்பூர் இளங்கோயிலைப் பற்றிப் பல தடவைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. இங்கே இளங்கோயில் என்பது சிவன் கோயிலா அல்லது திருமால் கோயிலா என்பதற்கு ஆதாரமில்லை. பெரியபுராணத்தில் மீயச்சூர் இளங்கோயில் பற்றி குறிக்கப்பட்டுள்ளது. ஆதலின் அது சிவன் கோயிலாதல் வேண்டும். விசயநகர வேந்தனாகிய இரண்டாம் ஹரிஹரனுடைய நாலூர்ச் சாசனத்தில் (Published in Epigraphia Indica Vol.III Page 126. Verse 24)குறிக்கப்பட்டுள்ள இளங்கோயில் சிவன் கோயிலாக இருக்கின்றது. இளங்கோயில் என்பது இளவரசனுடைய வீடு என்று பொருள் ஆகும். ஆதலின் சுப்பிரமணியர் கோயில் எனக் குறிப்பதாகக் கொள்ளலாம். இம்முறையில் திருச்சானூரில் இடிந்துபோன இளங்கோயில் சிவன் கோயில் என்று கூறுவதற்கு ஆதாரம் உண்டு. பழங்காலம் முதல் இதுவரையில் இவ்வூரில் கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டுக்- களில் No.262 of 1904) திருப்பதி திருவேங்கடத்துப் பெருமாளுக்கு இணைப்புக்கோயிலாக(as an accompaniment of the temple) இவ்விளங்கோயில் கட்டப்பட்டதாகத் தோன்றுகிறது. திருப்பதி யிலுள்ள தெய்வம் முதலில் சிவனாக இருந்தது என்னும் பிரபலமான நம்பிக்கைக்கு இது ஆதரவாக இருக்கிறது. திரு.டி,ஏ,கோபிநாதராயர், எம்.ஏ.எழுதியுள்ளது வருமாறு:--
“In one of the Tanjore inscriptions of the chola king Rajaraja I(SII.Vol.II.No.66) reference is made several times to Tiruvilangoyil temple at Kadambur. Here there is nothing to prove absolutely whether Tiruvilangoyil was a Siva or Vishnu temple. The Tamil work Periyapuranam which gives an account of sixty three devotees of Siva mentions the Ilangoyil at Miyachchur which must be Siva. Again the Nallur grant of the Vijayanagaara King Hari Hara II published by me(Ep.Indica Vol.III page 126 verse 24) Ilangoyil occurs as the name of a Siva Temple. The word Ilangoyil itself means the house of a young King and may be taken to denote a shrine in Tiruchchanur temple which has been pulled down was originally called Ilangoyil and was therefore Siva. From the earliest hitherto discovered Inscriptions of this place (No.262 of 1904) it appears that the shrine was built as an accompaniment of the temple at Tirupati known at the time as Tiruvengadathu Perumanandigal. Perhaps this can be taken to support the popular belief that the deity at Tirumalai was originally Siva (Annual report on South Indian Epigraphy for the year 1904 page 5) இக்கல்வெட்டின்மூலம் இப்பகுதி தமிழ் அரசர்கள் ஆண்ட பகுதி என்பது தெளிவாகிறது 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக